நடிகர் உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன்

நடிகர் உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன்
Updated on
1 min read

பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன். இவருடைய மேலாளராக இருந்த விபின் குமார் என்பவர், காக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த சில மாதங்களுக்கு முன், புகார் அளித்திருந்தார்.

அதில், டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி, முகநூலில் பதிவிட்டிருந்தேன். இதனால் கோபமடைந்த உன்னி முகுந்தன், தன்னைத் தாக்கியதாகவும் ‘மார்கோ’ படத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையாததால் விரக்தியில் இப்படிச் செய்ததாகவும் கூறியிருந்தார். இது பரபரப்பானது. இதை உன்னி முகுந்தன் மறுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில், அக்.27-ம் தேதி ஆஜராகுமாறு காக்கநாடு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பயோபிக்கில் உன்னி முகுந்தன் நடிப்பதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரையும் படக்குழு நேற்று வெளியிட்டது. இதற்கிடையே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in