’மிராய்’ வரவேற்பு: தேஜா சஜ்ஜாவின் அடுத்த திட்டம்

’மிராய்’ வரவேற்பு: தேஜா சஜ்ஜாவின் அடுத்த திட்டம்

Published on

இரண்டு படங்களின் தொடர் வெற்றியால், தேஜா சஜ்ஜா தனது அடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார்.

கார்த்திக் கட்டம்நேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மிராய்’. இப்படம் ரூ.100 கோடியைத் தாண்டி மாபெரும் வசூல் செய்து வருகிறது. இதனால் படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. ‘ஹனுமான்’ மற்றும் ‘மிராய்’ என தொடர்ந்து படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் தனது அடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார் தேஜா சஜ்ஜா.

அடுத்ததாக ‘ஜோம்பி ரெட்டி 2’ படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதன் கதை, திரைக்கதையினை பிரசாந்த் வர்மா வழங்க அவருடைய இணை இயக்குநர் இயக்கவுள்ளார். இதனை பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் பாகம் வெற்றியால், இரண்டாம் பாகத்தின் வெற்றி அதைவிட பெரிதாக இருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து ‘ஜெய் ஹனுமான்’ மற்றும் ‘மிராய் 2’ ஆகிய படங்களில் நடிக்கவும் கையொப்பமிட்டு இருக்கிறார். இதில் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் நடிக்கவுள்ளார் தேஜா சஜ்ஜா.

விரைவில் பிரசாந்த் வர்மா, ரிஷப் ஷெட்டி மற்றும் தேஜா சஜ்ஜா மூவரும் அமர்ந்து கதை விவாதத்தில் ஈடுபடவுள்ளார். இதனைத் தொடர்ந்து ‘மிராய் 2’ படத்துக்கான கதை விவாதமும் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in