ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா சாப்டர் 1’

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா சாப்டர் 1’

Published on

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார்.

மோகன்லால் நடித்த ‘ஹ்ருதயபூர்வம்’ மற்றும் ஃபகத் பாசில் நடித்த ‘ஓடும் குதிர சாடும் குதிர’ ஆகிய படங்களுடன் இந்த படமும் வெளியானது. ஆனால் மற்ற இரண்டு படங்களை விட ‘லோகா’ படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

முதல் நாளில் 250 திரையரங்குகளில் வெளியான ‘லோகா’, அடுத்த நாளில் இருந்து 325 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் கூட திரைகள் இப்படத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இப்படம் 5 நாட்களில் ரூ.81 கோடி வசூலைக் கடந்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி இந்தியா முழுவதும் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளது. இதே நிலை நீடித்தால் நாளை (புதன்கிழமை) இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்து விடும் என்று சினிமா நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் நிவின் பாலியின் ‘பிரேமம்’, மம்மூட்டியின் ‘டர்போ’ போன்ற மலையாள படங்களின் சாதனையையும் இப்படம் முறியடித்திருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in