

பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார்.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் பிருத்விராஜ். ‘மொழி’, ‘ராவணன்’, ‘காவியத் தலைவன்’ என ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லூசிஃபெர்’. இந்தப் படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார்.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தீபக் தேவ் இசையமைக்கிறார். ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
பிருத்விராஜ் நடிப்பில் தற்போது ‘கூடே’, ‘நைன்’, ‘ரணம்’, ‘ஆடுஜீவிதம்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.