

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் இணைந்து நடித்த இந்திப் படம் ‘வார்’. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படமான இதன் அடுத்த பாகம் ‘வார் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப் படம் ஆக.14-ல் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் தற்போது இந்தப் படத்துக்காக ஒரு பாடலைப் படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில்இதன் படப்பிடிப்பில் ஹிருத்திக் ரோஷனிடம் இருந்து, தான் அதிகம் கற்றுக் கொண்டதாக ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “ஹிருத்திக்குடன் படப்பிடிப்புதளத்தில் இருப்பது எப்போதும் உற்சாகம் தரும். ‘வார் 2’ படப்பிடிப்புபயணத்தில் அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டேன். அயன்முகர்ஜி சிறப்பாக இயக்கி இருக்கிறார். பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் தரும் விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.