‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பில் இணைந்த நானி!

‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பில் இணைந்த நானி!

Published on

‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நானி. மேலும், படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றமில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது படக்குழு.

‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘தி பாரடைஸ்’. இதன் அறிமுக டீஸர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் தாமதமாக நடைபெற்றதால் வெளியீட்டு தேதியும் தாமதமாகும் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பான வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கி இருக்கிறது ‘தி பாரடைஸ்’ படக்குழு. இப்படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்குகளில் நானி நடிக்க படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறது. மேலும், சிறுவயது கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பும் கடந்த வாரம் நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி வெளியீடு என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால் ‘பெடி’ படத்துடன் ‘தி பாரடைஸ்’ மோதுவது உறுதியாகி இருக்கிறது.

’தி பாரடைஸ்’ படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது தொடங்கியுள்ள படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் நானி உடன் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்கவுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என பன்மொழிகளில் வெளியாகிறது.

joins#TheParadise

Natural Star @NameisNani joins the sets of #TheParadise today.

Few important sequences related to childhood portions were shot last week.#THEPARADISE in CINEMAS.
Releasing in Telugu, Hindi, Tamil, Kannada,… pic.twitter.com/00J3L0z0J4

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in