

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தபு, துனியா விஜய் குமார் ஏற்கெனவே ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது இதன் நாயகியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய் சேதுபதி – சம்யுக்தா மேனன் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஜூலையில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி கவூர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘லைகர்’ மற்றும் ‘டவுள் ஐஸ்மார்ட்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் இப்படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறார் பூரி ஜெகந்நாத்.
Welcome to the world of #PuriSethupathi dear @iamsamyuktha_
A #PuriJagannadh film
Starring Makkalselvan @VijaySethuOffl, #Tabu, @OfficialViji
Produced by @puriconnects @IamVishuReddy pic.twitter.com/W6VdaFy2Yr