‘அகண்டா’ பாகம் 3-க்கு இப்போதே அச்சாரமா?

‘அகண்டா’ பாகம் 3-க்கு இப்போதே அச்சாரமா?
Updated on
1 min read

‘அகண்டா 2’ படத்தின் முடிவில் 3-ம் பாகத்துக்கான தொடக்கமும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் ‘அகண்டா’. இப்படத்தின் மாஸான காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் படமும் வசூலில் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘அகண்டா 2’ உருவாகி வருகிறது.

செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ள ‘அகண்டா 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதன் விநியோக உரிமைகள், ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை என அனைத்துக்குமே தயாரிப்பு நிறுவனம் பெரும் தொகை கேட்டுள்ளது. இதனை கைப்பற்றுவதற்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இதனிடையே, ‘அகண்டா 2’ படத்தின் முடிவில் 3-ம் பாகத்துக்கான தொடக்கமும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் எப்போது தொடங்கும் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் படக்குழு வெளியிடவில்லை. 2-ம் பாகத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளின்போது, 3-ம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in