அனிருத்தின் இசை தாமதம்: ‘கிங்டம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு?

அனிருத்தின் இசை தாமதம்: ‘கிங்டம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு?
Updated on
1 min read

அனிருத் பின்னணி இசை தாமத்தினால், ‘கிங்டம்’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் டீசர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், தற்போது பின்னணி இசை தாமதமாவதால் இதன் வெளியீடு ஜூலை 4-ம் தேதியில் இருந்து தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் மீண்டும் தள்ளிவைக்காமல் முடிந்தளவுக்கு ஜூலை 4-ல் வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பிலும் படக்குழு இருக்கிறது. இந்தப் பணிகள் தாமதத்தினால் மட்டுமே படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. விரைவில் பட வெளியீடு தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.

கவுதன் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. நாக வம்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in