கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா!

கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா!
Updated on
1 min read

மீண்டும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

சன்னி தியோல் நடிப்பில் வெளியான ‘ஜாட்’ படத்தினை இயக்கியிருந்தார் கோபிசந்த் மாலினேனி. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் ‘ஜாட் 2’ படத்தினை அறிவித்தது படக்குழு. இப்போதைக்கு இந்தப் படம் தொடங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஏனென்றால், கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் பாலகிருஷ்ணா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 111-வது படமாகும். இதனை ‘விரித்தி’ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் தான் ராம்சரண் நடித்து வரும் ‘பெடி’ படத்தினை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தில் கோபிசந்த் மாலினேனி – பாலகிருஷ்ணா கூட்டணி இணைந்து பணிபுரிந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணைந்து பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.

THE GOD OF MASSES is back… and this time, we’re ROARING LOUDER!

Honoured to reunite with #NandamuriBalakrishna garu for our 2nd MASS CELEBRATION together — #NBK111

This one’s going to be HISTORIC!

Backed by the passionate force #VenkataSatishKilaru garu under… pic.twitter.com/1bRWPX83J0

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in