‘அரசியின் வருகை’ - அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் தீபிகா படுகோன்: வீடியோ பகிர்ந்த படக்குழு

‘அரசியின் வருகை’ - அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் தீபிகா படுகோன்: வீடியோ பகிர்ந்த படக்குழு

Published on

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்நிலையில், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் பிரத்யேக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது படக்குழு. ‘TheFacesOfAA22xA6’ என்று ஹேஷ்டேகுடன் இது பகிரப்பட்டுள்ளது.

சுமார் 1 நிமிடம் 16 வினாடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இயக்குநர் அட்லி, தீபிகா படுகோனிடம் கதையை விவரிக்கிறார். தொடர்ந்து ஸ்க்ரீன் டெஸ்ட் பணிகள் நடைபெறுகிறது. அதில் குதிரை மீது போர் வாளை ஏந்தியபடி தீபிகா பயிற்சி செய்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழுவும் அரசியின் வருகை என சொல்லி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. ஏற்கெனவே கடந்த 2023-ல் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்த ‘ஜவான்’ படத்தில் தீபிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து நடிக்கும் படத்தை, அட்லி இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும்” என படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

ஜூன் மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் 6 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்காகத் தமிழ் மற்றும் பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் தீபிகா இணைந்துள்ளது உறுதியாகி உள்ளது. வரும் நாட்களில் இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Queen marches to conquer!Welcome onboard @deepikapadukone#TheFacesOfAA22xA6

https://t.co/LefIldi0M5#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures@alluarjun @Atlee_dir#SunPictures #AA22 #A6 pic.twitter.com/85l7K31J8z

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in