ஜூலை 11-ல் அனுஷ்காவின் ‘காதி’

ஜூலை 11-ல் அனுஷ்காவின் ‘காதி’
Updated on
1 min read

அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு நடித்துள்ள படம், ‘காதி’. அனுஷ்காவின் 50-வது படமான இதை கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி இணைந்து தயாரித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இதில் அதிரடி ஆக் ஷன் நாயகியாக அனுஷ்கா நடித்துள்ளார்.

மனோஜ் ரெட்டி கடாசானி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜூலை 11-ம் தேதி வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in