வியத்தகு வசூல் வேட்டையில் ‘துடரும்’ - படக்குழு மகிழ்ச்சி

வியத்தகு வசூல் வேட்டையில் ‘துடரும்’ - படக்குழு மகிழ்ச்சி
Updated on
1 min read

‘துடரும்’ படத்தின் வியத்தகு வசூல் வேட்டையால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் இப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், இப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது.

தற்போது வரை கேரளாவில் மட்டும் ரூ.75 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது. கேரளாவில் அதிக வசூல் செய்த படங்களில் 8-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘பிரேமலு’ படத்தின் வசூலை முறியடித்து 8-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக 11 நாட்கள் ரூ.5 கோடி வசூலை கடந்திருக்கிறது. கேரளா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

2025-ம் ஆண்டு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இரண்டு இடங்களை மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ ஆகியவை பிடித்திருக்கிறது. இந்திப் படமான ‘சாவா’ படத்தின் வசூலை முறியடித்தது ‘துடரும்’. தொடர்ச்சியாக வசூலைக் குவித்து வருவதால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in