பெருகும் வரவேற்பு: தமிழிலும் வெளியாகிறது ‘துடரும்’

பெருகும் வரவேற்பு: தமிழிலும் வெளியாகிறது ‘துடரும்’

Published on

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘துடரும்’ திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

‘எம்புரான்’ படத்துக்கு எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, எந்தவித விளம்பரமும் இன்றி வெளியான படம் ‘துடரும்’. தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் வசூலில் 100 கோடியை கடந்துவிட்டது.

மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை முன்வைத்து தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். அதே போல் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு மே 9-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் டப்பிங்கிற்கு ‘தொடரும்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதர மொழியில் ரீமேக் உரிமைக்கு பலரும் அணுகினார்கள். ஆனால், யாருக்குமே கொடுக்காமல் நேரடியாக டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்களா அல்லது டப்பிங் செய்து வெளியிடுகிறார்களா என்பதும் விரைவில் தெரியவரும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in