

இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் ‘ஹிர்தயம் லுபாலா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் தேவரகொண்டா - அனிருத் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது.
அனிருத்துடன் முதன்முறையாக இணைந்திருப்பதால், அவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அதில், “நான் ’விஜபி’ மற்றும் ‘3’ பட நாட்களில் இருந்தே அனிருத்தின் பெரிய ரசிகன். யார் இவர், நான் எப்போதாவது நடிகனாகிவிட்டால், திரையில் வரும்போது இவருடைய இசை ஒலிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
10 வருடங்களுக்கு பின்பு இப்போது எனது 13-வது படம் 28 நாட்களில் வெளியாகிறது. இது அனிருத் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியின் முதல் பாடம். நான் மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இன்றைக்கு ‘கிங்டம்’ படத்தின் உலகத்தையும், உணர்ச்சிகளையும் உங்களுக்கு காட்டத் தொடங்குகிறோம். அது உங்கள் உலகத்தில் சந்தோஷத்தையும், நினைவுகளையும் கொண்டு வரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கவுதம் டின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘கிங்டம்’. இதன் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது மே 30-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
Hey @anirudhofficial #HridayamLopala from #Kingdom - Today 4.06 PM onwards @gowtam19 @vamsi84 pic.twitter.com/NoIt6IiXea