

துல்கர் சல்மான் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கவுள்ளார்.
நஹாஸ் ஹிதாயத் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் மும்முரமாக தொடங்க இருக்கிறது. இதனை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேஃபாரர் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் துல்கர் சல்மான். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் மிஷ்கின். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.
’ஐ அம் கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக ஜிம்ஷி காலித், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக சமன் சாக்கோ ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள்.
We are absolutely thrilled to welcome the multifaceted, incredibly talented Mysskin Sir to the #ImGame team! Get ready for an exciting game ahead!
#DulquerSalmaan #NahasHidhayath #WayfarerFilms #dQ40 #ImGame pic.twitter.com/Le6T6mzUUb