

தெலுங்கு சினிமாவின் முன்ணனி நடிகர்களில் ஒருவரான ராம் சரணின் ‘Peddi’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது அவரது நடிப்பில் உருவாகும் 16-வது படம். கடைசியாக ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படம் ரிலீஸ் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘Peddi’ படத்தை இயக்குநர் புச்சி பாபு இயக்குகிறார். இவர் ‘உபென்னா’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
A FIGHT FOR IDENTITY!! #RC16 is #Peddi.
A @BuchiBabuSana film.
An @arrahman musical.@NimmaShivanna #JanhviKapoor @RathnaveluDop @artkolla @NavinNooli @IamJagguBhai @divyenndu @vriddhicinemas @SukumarWritings @MythriOfficial pic.twitter.com/fuSN5IjDL1