நானிக்கு வில்லனாக மோகன் பாபு ஒப்பந்தம்?
நானிக்கு வில்லனாக மோகன் பாபு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
‘ஹிட் 3’ படத்தினை தொடர்ந்து ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் நானி. இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இதில் வில்லனாக நடிப்பதற்கு மோகன் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் மோகன் பாபு சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘தி பாரடைஸ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், உடனடியாக இதன் ஓடிடி உரிமையும் பெரும் விலைக்கு விற்பனையாகிவிட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
‘தி பாரடைஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்னும் படப்பிடிப்ப் தொடங்கப்படாத இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
