

‘கோர்ட்’ படம் பிடிக்கவில்லை என்றால் ‘ஹிட் 3’ படத்தைப் பார்க்காதீர்கள் என்று நடிகர் நானி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நானியும் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் நானி பேசியது பெரும் வைரலாகி வருகிறது.
‘கோர்ட்’ விழாவில் நானி பேசும் போது, “இதுவரை எனது படங்களை பாருங்கள் என்று கேட்டதில்லை. இப்போது முதன்முதலாக ‘கோர்ட்’ படத்தினை அனைவரும் பாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு இப்படம் பிடிக்கவில்லை என்றால், எனது அடுத்த படமான ‘ஹிட் 3’ பார்க்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பேசும் போது ‘ஹிட் 3’ இயக்குநர் சைலேஷும் மேடையில் இருந்தார். இதற்கு அவரிடம் மன்னிப்புக் கோரினார் நானி.
ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை நானி தயாரித்துள்ளார்.