தமனுக்கு விலை உயர்ந்த கார் பரிசளித்த பாலய்யா!

தமனுக்கு விலை உயர்ந்த கார் பரிசளித்த பாலய்யா!
Updated on
1 min read

இசையமைப்பாளர் தமனுக்கு விலை உர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் பாலய்யா.

கடைசியாக வெளியான 4 பாலய்யாவின் படங்களும் ரூ.100 கோடி வசூலை கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றன. இவை அனைத்துக்குமே தமன் தான் இசையமைப்பாளர். இந்த அன்பை முன்வைத்து தமனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் பாலய்யா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

பாலய்யாவின் வெற்றிக்கு தமனின் பாடல்கள், பின்னணி இசை தான் முதற்காரணம் என்று பலரும் விமர்சனத்தில் குறிப்பிட்டார்கள். இந்த அன்பின் வெளிப்பாடாகவே Porsche காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

கார் பரிசளித்துவிட்டு நிருபர்களிடம் பாலய்யா பேசும்போது, “இரண்டு தலைமுறை இசையமைப்பாளர்களை பார்த்து வருகிறேன். என் தம்பி தமன் ஒரு நல்ல இசையமைப்பாளர். அந்த தம்பிக்கு இந்த அண்ணனின் அன்புப் பரிசு” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகண்டா 2 - தாண்டவம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பாலய்யா. இதற்கும் தமன் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிக்க பாலய்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in