

கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததை அடுத்து கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் டிச.24-ம் தேதி அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
பிரபலமான புற்றுநோயியல் நிபுணர் முருகேஷ் மனோகர் சிகிச்சை அளித்தார். ஒரு மாதகால ஓய்வுக்குப் பிறகு சிவ ராஜ்குமார் பெங்களூருக்கு நேற்று முன் தினம் திரும்பினார். அவரை ஏராளமான ரசிகர்கள் வரவேற்றனர். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவ ராஜ்குமார், “புற்றுநோய் என்றதும் முதலில் பயந்தேன். என் ரசிகர்கள், நலம் விரும்பிகளின் ஆதரவு எனக்கு பலத்தைக் கொடுத்தது. மீண்டும் நடிக்கத் தொடங்கி, ரசிகர்களை மகிழ்விக்கக் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.