கோவாவில் ‘டாக்சிக்’ பாடல் காட்சி ஷூட் தீவிரம்
‘டாக்சிக்’ படத்தின் காதல் பாடல் ஒன்றை கோவாவில் படமாக்கி வருகிறது படக்குழு. இதில் யஷ் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் பங்கேற்று நடனமாடி வருகிறார்கள். இதன் நடனத்தை கணேஷ் ஆச்சார்யா வடிவமைத்து வருகிறார். இந்தப் பாடல் படப்பிடிப்பு சுமார் 10 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதில் யஷ், நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் டீஸர் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இதன் படப்பிடிப்பும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தினை உலகளவில் வெளியிட ஹாலிவுட் ஸ்டூடியோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ‘டாக்சிக்’ படத்தினை முடித்துவிட்டு ‘ராமாயணா’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் யஷ்.
