“பார்த்திராத ஓர் உலகம்” - பிரபாஸ் படம் குறித்து ஹனு ராகவபுடி

“பார்த்திராத ஓர் உலகம்” - பிரபாஸ் படம் குறித்து ஹனு ராகவபுடி
Updated on
1 min read

யாரும் பார்த்திராத ஓர் உலகம் என்று பிரபாஸ் படம் குறித்து ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘சீதாராமம்’ இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதன் படப்பிடிப்பில் தான் பிரபாஸுக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓய்வில் இருக்கிறார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படம் குறித்து ஹனு ராகவபுடி, “பிரபாஸ் உடன் என்னுடைய படம் மிகவும் சர்ப்ரைஸ் ஆன ஒன்றாக இருக்கும். அந்த அனுபவம் ஆடியன்ஸுக்கு ஒரு ட்ரீட் ஆக அமையும். இந்தப் படத்துக்காக இதுவரை யாரும் பார்த்திராத ஓர் உலகை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, படத்தின் போஸ்டர்களை வைத்து, இப்படம் போர் பின்னணியில் உருவாகும் ஒரு காதல் கதை என்று பலரும் தெரிவித்துள்ளனர். இதில் பிரபாஸுக்கு நாயகியாக இமான்வி நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம். பிரபாஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் மிதுன் சக்கரவர்த்தி, ஜெயபிரதா உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in