தென்னிந்திய சினிமா
3 மொழிகளில் உருவாகும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகும் படம், ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’. வினோத் டோண்டேலே இயக்கும் இதில் ’லூசியா’ படம் மூலம் பிரபலமான சதீஷ் நீனாசம் நாயகனாக நடிக்கிறார். அவருடன், பி.சுரேஷ், அச்யுத் குமார், கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா என பலர் நடித்துள்ளனர். லாவிட் ஒளிப்பதிவு செய்கிறார். பூர்ச்சந்திர தேஜஸ்வி இசை அமைக்கிறார். விருத்தி கிரியேஷன் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் சார்பில் வர்தன் நரஹரி, ஜெய்ஷ்ணவி மற்றும் சதீஷ் நீனாசம் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஹீரோ, சதீஷ் நீனாசம் முரட்டுத்தனமான தோற்றத்தில், கத்தியை ஏந்தியபடி இருக்கும் காட்சிகள் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
