‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ போல ஒரு படம் - ‘கேம் சேஞ்சர்’ குறித்து ஷங்கர் 

‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ போல ஒரு படம் - ‘கேம் சேஞ்சர்’ குறித்து ஷங்கர் 
Updated on
1 min read

சென்னை: ஒரு அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த கதை. இந்த படத்தில் எனக்கு பிடித்ததே அதன் வேகம் தான் என்று ‘கேம் சேஞ்சர்’ குறித்து இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “எனக்கு ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ போன்ற மாஸ் மசாலா படங்கள் மிகவும் பிடிக்கும். அது போல நாமளும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று மனதில் நீண்டநாட்களாக ஓடிக் கொண்டே இருந்தது. ‘கேம் சேஞ்சர்’ கதையில் அதற்கான வாய்ப்பு இருந்தது. ஒரு அரசு அதிகாரிக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த கதை. இந்த படத்தில் எனக்கு பிடித்ததே அதன் வேகம் தான். அருமையாக எடிட் செய்யப்பட்டுள்ள ஒரு படம்.

எங்கேயுமே நிற்காமல் பரபர என்று செல்லும். இதில் நான் விரும்பும் விஷயங்கள், மக்கள் என்னிடம் விரும்பும் விஷயங்களை முடிந்தவரை சுவார்ஸ்யமாக சொல்லியிருக்கிறோம். நல்ல பாடல்கள், நல்ல ஆக்‌ஷன், நல்ல வசனங்கள் அனைத்துமே இந்த படத்தில் உள்ளன. இதுதவிர நல்ல உணர்வுபூர்வமான விஷயங்களும் உள்ளன” இவ்வாறு ஷங்கர் கூறினார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கைரா அத்வானி, அஞ்சலி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். நாளை (ஜனவரி 10) உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in