ஓட்டல் அறையில் இருந்து நடிகர் திலீப் சங்கர் சடலமாக மீட்பு

ஓட்டல் அறையில் இருந்து நடிகர் திலீப் சங்கர் சடலமாக மீட்பு
Updated on
1 min read

மலையாள நடிகர் திலீப் சங்கர் சடலமாக ஓட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். மலையாள திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தவர், திலீப் சங்கர்.

‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அவர், அம்மா அறியாதே, சுந்தரி, பஞ்சாக்னி உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். சில நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

அறையிலிருந்து துர்நாற்றம் வந்ததைக் கண்டு, ஓட்டலில் உள்ளவர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அவர் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. திலீப் சங்கர் மறைவுக்கு மலையாள திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in