நடிகர் சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரம்!

நடிகர் சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரம்!

Published on

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், தமிழில் ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களில் நடித்துள்ளார். இவருக்குப் புற்றுநோய் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதையடுத்து அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார், தனக்கு டிச.24-ம் தேதி பிரபலமான புற்றுநோயியல் நிபுணர், மருத்துவர் முருகேஷ் மனோகர் சிகிச்சை அளிக்க இருப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி அவருக்கு சிறுநீரக புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நேற்று நடந்துள்ளது.

இதுகுறித்து, அவர் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிவராஜ்குமாருக்குப் புதன்கிழமை காலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் நலமாக இருக்கிறார். நன்றாகக் குணமடைந்து வருகிறார். ரசிகர்கள், நலம் விரும்பிகளின் ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி” என்று கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in