ரஜினியுடன் நடித்தது அற்புதமான அனுபவம் - நடிகர் உபேந்திரா உற்சாகம்

ரஜினியுடன் நடித்தது அற்புதமான அனுபவம் - நடிகர் உபேந்திரா உற்சாகம்
Updated on
1 min read

உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், 'யு.ஐ’. சயின்ஸ் பிக்‌ஷன் ஆக்‌ஷன் படமான இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் நாளை (டிச.20) வெளியாகிறது. இந்தப் படம் பற்றி உபேந்திரா கூறும்போது, “இது உளவியல், அரசியல் நையாண்டி படம். பல உருவகங்களுடன் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இதில் நாங்கள் புதிய உலகத்தை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் வடிவமைத்த செட் தனித்துவமானது. படத்தில் இடம் பெறும் வீடுகள், காஸ்ட்யூம்கள் அனைத்தும் வேறு ஒரு விஷயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். ஆரம்பத்தில், பார்வையாளர்களுக்கு அவை விசித்திரமாகத் தோன்றினாலும் பிறகு புரிந்து கொள்ள முடியும். உருவகமாக இந்தப் படம் சில விஷயங்களைப் பேசும். ரஜினிகாந்துடன் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறேன். அவருடன் நடிப்பது எனது வாழ்க்கையின் கனவு. நான் என்னை ரஜினியின் சிஷ்யனாகவே கருதுகிறேன். அவருடன் இணைந்து நடித்தது அற்புதமான அனுபவம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in