3 நாட்களில் ரூ.621 கோடி வசூலித்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ 

3 நாட்களில் ரூ.621 கோடி வசூலித்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ 
Updated on
1 min read

ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் 3 நாட்களில் ரூ.621 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது ‘புஷ்பா 1’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (டிச.5) வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படம் முதல் நாளில் ரூ.294 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியான 3 நாட்களில் இதுவரை ரூ.621 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தி வெர்ஷனில் மட்டுமே ரூ.200 கோடி வசூலை தாண்டியுள்ளது. விரைவில் ரூ.1000 கோடியை வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in