திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
Updated on
1 min read

திருமண விஷயத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

‘ஹலோ மம்மி’ என்னும் மலையாள படத்தை விளம்பரப்படுத்த ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி அளித்துள்ளார். அதில், திருமணம் குறித்த தனது பார்வை வெளிப்படுத்தி இருக்கிறார். “எனக்கு திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. 8, 10, 25 வயதில் கூட திருமணம் என்பது எனக்கு கனவு போன்றது. குருவாயூர் கோயிலில் திருமணம் செய்வதை நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால் நான் வளர்ந்த பிறகு என்னுடைய பார்வை மாறிவிட்டது. என்னை சுற்றி இருந்த திருமணம் ஆனவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளனர்.

எனக்கு இப்போது 34 வயது ஆகிறது. நான் பார்த்த ஒரே ஒரு குடும்பம் தான் மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்கிறது. அவர்களும் மலையாளிகள் அல்ல. மற்றவர்கள் சமரசம் செய்து கொண்டு வாழ்வதை நான் பார்க்கிறேன். திருமணம் என்பது எனக்கானது இல்லை என்ற புரிதலும் விழிப்புணர்வும் எனக்கு ஏற்பட்டது. என்னுடைய அம்மாவிடம் ஒரு மேட்ரிமோனி கணக்கை தொடங்குமாறு கூறியிருந்தேன். நான் மேட்ரிமோனி இணையதளத்தில் இருந்தேன், ஆனால் மக்கள் அது போலி கணக்கு என்று நினைத்துக் கொண்டனர்” என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in