

சென்னை: “புஷ்பா 2’ முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும். முதல் பாகம் அவருடைய அறிமுகம் தான், உண்மையில் ஃபஹத் யார் என்பதை 2-ம் பாகம் காட்டும்” என நடிகையும், ஃபஹத் மனைவியுமான நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் அல்லு அர்ஜுன் - ஃபஹத் ஃபாசில் இருவருக்குமான மோதல் தான் கதையாக இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபஹத் ஃபாசில், 2-ம் பாகத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘புஷ்பா 2’ குறித்து ஃபஹத் மனைவி நஸ்ரியா கூறுகையில், “தனது ஒவ்வொரு படத்திலும் நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார் ஃபஹத். ‘புஷ்பா’ முதல் பாகத்தை விட 2-ம் பாகத்தில் அவருக்கான திரை நேரம் அதிகம். இது முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும். முதல் பாகம் அவருடைய அறிமுகம் தான், உண்மையில் ஃபஹத் யார் என்பதை 2-ம் பாகம் காட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இதில் பன்வார் சிங் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். தற்போது 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உலகம் முழுக்க டிசம்பர் 5-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாகியுள்ளது.