லண்டன் பல்கலைக்கழகத்தில் எஸ்தர் அனில்

லண்டன் பல்கலைக்கழகத்தில் எஸ்தர் அனில்
Updated on
1 min read

‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் மலையாள நடிகை எஸ்தர் அனில். தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘மின்மினி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவர் மும்பை புனிதசேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் ஏற்கெனவே பட்டம் பெற்றுள்ளார். இப்போது, லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸி’ல் முதுநிலை வகுப்பில் சேர்ந்துள்ளார். ஒரு வருடப் படிப்பான இதில் செப்டம்பர் மாதம் சேர்ந்ததாகக்கூறியுள்ள எஸ்தரின் தந்தை, இதில் சேர்ந்துபடிக்க வேண்டும் என்பது எஸ்தரின் கனவாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in