கோவா பட விழாவில் மஞ்சும்மள் பாய்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கோவா பட விழாவில் மஞ்சும்மள் பாய்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
Updated on
1 min read

இந்திய சர்வதேச திரைப்பட விழா, நவ. 20-ம்தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் 25 முழு நீள திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இதைப் பிரபல நடிகரும் இயக்குநருமான சந்திரபிரகாஷ் திவேதி தலைமையிலான நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ரன்தீப் ஹூடா இயக்கி, நடித்த சாவர்க்கரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்’ என்ற படம் முதல் படமாகத் திரையிடப்பட உள்ளது.

மேலும், மகாவதார் நரசிம்மா, ஆர்டிகிள் 370,12த் ஃபெயில், காந்த் ஆகிய இந்தி திரைப்படங்களும் ஆடுஜீவிதம், பிரம்மயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், லெவல் கிராஸ் ஆகிய மலையாளப் படங்கள், தமிழிலிருந்து ஜிகர்தண்டா டபுஸ் எக்ஸ் படம், சின்ன கதா காடு, கல்கி 2829 ஏடி ஆகிய தெலுங்கு படங்கள், கன்னடத்திலிருந்து வென்கியா, கேரேபேடே ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன. திரைப்படங்கள் அல்லாத ஆவண மற்றும் குறும்படப் பிரிவில் 20 படங்கள் திரையிடப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in