

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை வெளியானதை அடுத்து சில நடிகைகள் வெளிப்படையாக பாலியல் புகார்களைக் கூறினர்.
கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர், நடிகர் முகேஷ், இடைவேளை பாபு உட்பட சிலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கில் கடந்தமாதம் 24-ம் தேதி முகேஷை விசாரித்த மராடு போலீஸார் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
இந்நிலையில் மற்றொரு நடிகை ஒருவரும் முகேஷ் மீதுபாலியல் புகார் கூறியிருந்தார். 2011-ம்ஆண்டு படப்பிடிப்புக்காக வடக்கன்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, முகேஷ், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வடக்கன்சேரி போலீஸார், முகேஷிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.