துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ட்ரெய்லர் எப்படி? - பணமும், பணம் சார்ந்த வாழ்க்கையும்!

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ட்ரெய்லர் எப்படி? - பணமும், பணம் சார்ந்த வாழ்க்கையும்!
Updated on
1 min read

சென்னை: துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? - “என் பேரு பாஸ்கர் குமார். என் சம்பளம் 6,000 ரூபாய். வறுமையின் எல்லையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், நான் தான் வேணும்னு என்ன கட்டிக்கிட்டா என்னுடைய சுமதி. என் மனைவி” என இன்ட்ரோ கொடுக்கிறார் துல்கர் சல்மான். சாமானியனாக வாழ்ந்து வரும் துல்கர் சல்மானை பண நெருக்கடி அழுத்துகிறது.

“பணம் இருந்தா தான் பாசம், மரியாதை” என ஓரிடத்தில் அவரது மனைவி சொல்கிறார். பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் அவர், “குடும்பத்துக்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் தப்பில்ல” என கூற, அடுத்தடுத்த காட்சிகளில் அவர் கையில் பணம் புழங்குகிறது. சுற்றியிருப்பவர்கள் ஆச்சரியமடைகின்றனர். அவர் எப்படி இந்த காசை சம்பாதிக்கிறார் என்பதுதான் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. மொத்த ட்ரெய்லரும் பணத்தின் இன்றியமையா தேவையையும், அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

லக்கி பாஸ்கர்: துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது ‘கிங் ஆஃப் கோதா’. எதிர்மறை விமர்சனங்களால் படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

‘லக்கி பாஸ்கர்’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 1980 களின் பிற்பகுதியில் 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கிறது இப்படம். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in