

சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள ‘விஸ்வம்பரா’ தெலுங்கு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - புதியதோர் உலகத்தில் நடக்கும் பேண்டஸி படமாக இப்படம் உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது. நேர்த்தியான கிராஃபிக்ஸ், டீசரின் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. முன்னதாக வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்தை போல புராணம் + ஃபேன்டஸி இணைந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. அநீதி தலைவிரித்தாடும்போது அங்கே ஹீரோவாக வந்து நிற்கிறார் சிரஞ்சீவி. அதுவும் பறக்கும் குதிரையில் இன்ரோ கொடுக்கிறார். ஃபேன்டஸி உலகில், எதிரிகளை அடித்து துவம்சம் செய்து பறக்க விடுகிறார். இறுதியில் அனுமான் சிலைக்கு முன்பு சிரஞ்சீவி போஸ் கொடுப்பதுடன் டீசர் நிறைவடைகிறது.
விஸ்வம்பாரா: இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வம்பரா’. UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. த்ரிஷா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முன்னணி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்துக்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ: