‘பிரச்சினைகளை ஒரு பெண் பேசினால்…’ - பத்மபிரியா சொல்லும் தகவல்

பத்மபிரியா
பத்மபிரியா
Updated on
1 min read

தமிழில், தவமாய் தவமிருந்து. சத்தம் போடாதே. பட்டியல், மிருகம், பொக்கிஷம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பத்மபிரியா. மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு 4 ‘மிருகம்’ படத்தில் நடித்தபோது, அதன் இயக்குநர் சாமி, படப்பிடிப்பின் கடைசி நாளில் பத்மபிரியா கன்னத்தில் அறைந்த விவகாரம் அப்போது பரபரப்பானது.

கேரள மாநிலம் வடகராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அதுபற்றி பேசிய பத்மபிரியா, “ஒரு பெண் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினால், அவரையே பிரச்சினையாக்கி விடுகிறார்கள். மிருகம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை மாற்றி வெளியிட்டன.

அந்த இயக்குநரை நான் அடித்ததாகச் செய்தி வெளியானது. பிறகு தமிழ்த் திரைப்படச் சங்கங்களில் புகார் அளித்தேன். இயக்குநருக்கு ஆறு மாதம் படம் இயக்க தடை விதிக்கப்பட்டது. இயக்குநரை கேள்வி கேட்டதால் ஏற்கெனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கப்பட்டேன். ஆனால் அந்தப் படத்தில் நடித்ததற்காக மாநில அரசு சிறந்த நடிகைக்கான விருதை அளித்தது”என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “நடிகர்களுக்குத்தான் சினிமாவில் மார்க்கெட் என்று கூறிவருகிறார்கள். 90 சதவிகித திரைப்படங்கள் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலையில் நடிகர்களால்தான் படங்கள் ஓடுகிறது, நடிகைகளால் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in