

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ திரைப்படம் முதல் நாளில் ரூ.172 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தேவரா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் நேற்று (செப்.27) திரையரங்குகளில் வெளியானது. ‘சுறா’, ‘சிலம்பாட்டம்’ படங்களைப்போல இருப்பதாக பலரும் விமர்சித்தனர்.
ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் ரூ,172 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ முதல் நாளில் ரூ.191 கோடியை வசூலித்தது. அந்த வகையில் இந்த ஆண்டின் தெலுங்கில் 2வது பெரிய ஓப்பனிங்காக இப்படம் அமைந்துள்ளது. இபடம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. | விமர்சனத்தை வாசிக்க: தேவரா Review: ‘சுறா’, ‘சிலம்பாட்டம்’ நிழலாடும் ஒரு ‘பான் இந்தியா’ மசாலா!