

‘கேம் சேஞ்சர்’ படத்தின் பாடலை ஷங்கர் புதிய வடிவில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை தில் ராஜு தயாரித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 20-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்திலிருந்து ‘ரா மச்சா மச்சா’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் நோக்கில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் இணைந்து பேசும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது படக்குழு.
அதில் இயக்குநர் ஷங்கர், “ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற நடனங்களை ஒரே பாடலுக்குள் கொண்டு வந்துள்ளோம். இசை, படமாக்கப்பட்ட விதம் என அனைத்துமே பிரம்மாண்டமாகவும், பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும். கணேஷ் ஆச்சர்யா நடனம் அமைத்துள்ளார். இதில் வரும் பின்னணி இசைக்கு, ஒரே டேக்கில் நடனம் ஆடியிருக்கிறார் ராம்சரண்.” என்று தெரிவித்துள்ளார்
இசையமைப்பாளர் தமன் பேசும் போது, “ஒரே பாடலில் பல்வேறு இசைகளைக் கொண்டு வருவது சவாலாக இருந்தது. பாடலை 1000 நடனக் கலைஞர்களை கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோ லிங்க்...