ரசிகர்களை அகில் சந்திக்காதது ஏன்? - நாகார்ஜுனா விளக்கம்

ரசிகர்களை அகில் சந்திக்காதது ஏன்? - நாகார்ஜுனா விளக்கம்
Updated on
1 min read

ரசிகர்களை அகில் சந்திக்காதது குறித்து நாகார்ஜுனா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் அகில். இவர் ‘அகில்’, ’ஹலோ’, ’மிஸ்டர் மஞ்னு’, ‘Most Eligible Bachelor’ மற்றும் ‘ஏஜெண்ட்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மேலும், சில படங்களில் கவுரவ கதாபாத்திரங்களில் தோன்றியிருக்கிறார்.

‘ஏஜெண்ட்’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு எந்தவொரு புதிய படத்திலும் இன்னும் ஒப்பந்தமாகாமல் உள்ளார் அகில். மேலும், எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். தனது அடுத்த படத்துக்கான கதை கேட்கும் படலத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, நாகேஸ்வர ராவ் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று (செப்.20) நடைபெற்றது. அதில் நாகார்ஜுனா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அப்போது “ஒரு வெற்றி படத்தை கொடுத்துவிட்டே ரசிகர்களை சந்திப்பார் அகில்” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஆண்டு ANR NATIONAL AWARD சிரஞ்சீவிக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான விழா அக்டோபர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிரஞ்சீவிக்கு விருது வழங்க இருப்பதாக நாகார்ஜுனா குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in