மீண்டும் திருமண வதந்தி: நடிகை திவ்யா கொந்தளிப்பு

நடிகை திவ்யா (கோப்புப் படம்)
நடிகை திவ்யா (கோப்புப் படம்)
Updated on
1 min read

சென்னை: மீண்டும் பரவி வரும் திருமண வதந்தி குறித்து நடிகை திவ்யா காட்டமாக பதிலளித்துள்ளார்.

கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. நடிகை, தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர். இவருக்கு வயது 40-ஐ கடந்துவிட்டாலும் திருமணம் செய்யாமல் வலம் வருகிறார். தமிழில் சிம்பு நடித்த ‘குத்து’ படத்தில் நாயகியாக நடித்தவர் தான் திவ்யா என்பது நினைவுகூரத்தக்கது. இவருக்கு திருமணமாகப் போகிறது என்று அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கம். அதேபோல் நேற்று (செப்.10) தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின.

இது பலராலும் பகிரப்பட்டது. இந்த திருமண வதந்தி தொடர்பாக திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “ஊடகங்களால் எனக்கு பலமுறை திருமணம் நடந்துள்ளது. அந்த எண்ணிக்கையை தவறவிட்டுவிட்டேன். நான் திருமணம் செய்து கொண்டால், நானே உங்களிடம் தெரிவிக்கிறேன். சரிபார்க்கப்படாத ஆதாரங்களில் இருந்து வரும் வதந்திகளை நிறுத்துங்கள்” என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார் திவ்யா ஸ்பந்தனா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in