மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் மரணம்

மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் மரணம்
Updated on
1 min read

மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 37. ‘நவகதர்க்கு ஸ்வாகதம்’, ‘தூரம்’ உட்பட சில மலையாளப் படங்களில் நடித்திருப்பவர் நிர்மல் பென்னி. யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்திருந்த இவர், சினிமாவிலும் நடித்து வந்தார்.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த ‘ஏமன்’ படத்தில் கொச்சச்சனாக நடித்து இன்னும் பிரபலமானார். திருவனந்தபுரத்தில் வசித்து வந்த அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.

அவரின் மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in