‘ஆர்டிஎக்ஸ்’ தயாரிப்பாளர்கள் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

‘ஆர்டிஎக்ஸ்’ தயாரிப்பாளர்கள் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மலையாள நடிகர்கள் ஷேன் நிகாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ்மாதவ் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிஎக்ஸ்’ (ராபர்ட் டோனி சேவியர்). நஹாஸ் ஹிதயத் இயக்கியிருந்தார்.‘வீக்எண்ட் பிளாக்பஸ்டர்’ சார்பில் சோஃபியா பால், ஜேம்ஸ் பால்தயாரித்தனர். ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம்உலக அளவில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதன் தயாரிப்பாளர்கள் மீது, திருப்புனித்துரா பகுதியை சேர்ந்த அஞ்சனா ஆப்ரஹாம் என்பவர் போலீஸில்கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். அதில்‘இந்தப் படத்துக்காக ரூ.6 கோடி முதலீடு செய்தேன். லாபத்தில் 30 சதவிகிதம் சேர்த்து தருவதாகக் கூறினர். ஆனால், முதலீடு செய்த பணத்தை மட்டுமே திருப்பி தந்துவிட்டு லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த நிதி மோசடி புகார்குறித்து விசாரணை நடத்த, திருப்புனித்துரா முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in