'தி டாக்ஸிக்’ படத்தில் இன்னொரு நாயகி!

'தி டாக்ஸிக்’ படத்தில் இன்னொரு நாயகி!
Updated on
1 min read

‘கே.ஜி.எஃப்’ படங்களில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமான யாஷ், அடுத்து நடிக்கும் படம், 'தி டாக்ஸிக்’. இதை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சகோதரி கேரக்டரில் நயன்தாராவும் முக்கியமான வேடத்தில் இந்தி நடிகை ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். 1950, 1970 காலகட்டங்களில் நடக்கும் போதை மாஃபியா பற்றிய படமான இதன் முக்கியமான காட்சிகள் இங்கிலாந்தில் படமாக்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகை தாரா சுதாரியா இன்னொரு ஹீரோயினாக இணைந்துள்ளார். யாஷுக்கு இந்தப் படத்தில் 2 நாயகிகள் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in