சிங்கப்பூர் பல்கலை.யில் முதுகலை பட்டம் பெற்ற பவன் கல்யாண் மனைவி - வீடியோ பகிர்வு

சிங்கப்பூர் பல்கலை.யில் முதுகலை பட்டம் பெற்ற பவன் கல்யாண் மனைவி - வீடியோ பகிர்வு
Updated on
1 min read

சென்னை: நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இந்நிகழ்வில் பவன் கல்யாண் கலந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1997-ம் ஆண்டு பவன் கல்யாணுக்கு நந்தினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். 2009-ல் ரேணு தேசாய் என்பவரை மணந்தார் பவன். ஆனால், இருவரும் 2012-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 2013-ம் ஆண்டு பவன் கல்யாண் அன்னா லெஷ்னேவா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், பவன் கல்யாண் மனைவி அன்னா, சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இது தொடர்பான பட்டமளிப்பு விழாவில் பவன் கல்யாண் தனது மகன் மார்க்குடன் கலந்துகொண்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in