போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது

போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது

Published on

ஹைதராபாத்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரை தெலங்கானா போலீஸார் கைது செய்தனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அண்மையில் வெளியான ‘இந்தியன் 2’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சகோதரர் அமன் ப்ரீத் சிங்கை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி தெலங்கானா போலீஸார் செய்துள்ளனர். இவருடன் மேலும் 4 நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன் தினம் (ஜூலை 14) ஹைதராபாத்தில் 2.6 கிலோ போதைப் பொருளை தெலங்கானா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கில் தற்போது அமன் ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதனன், நிகில் டாமன் ஆகிய ஐந்து பேரும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு, போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதனை ஏற்று அவர் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in