

கடந்த ஆண்டின் சிறந்த இந்தி மொழிப் படமாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ‘நியூட்டன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘மெரி நிம்மோ’ இந்திப் படத்தில் நடித்த அஞ்சலி பாட்டீல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். 8 வயது பையனின் காதலை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள இப்படத்தைத் தொடர்ந்து, தமிழில் ‘காலா’ படமும் தனக்கு மிகப்பெரிய அடையாளத்தை தென்னிந்தியாவில் ஏற்படுத்தும் என்கிறார், அஞ்சலி பாட்டீல். இதுகுறித்து அவர் குறிப்பிடும்போது ‘‘காலா படத்தில் என் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கும். மும்பை பின்னணியில் எனக்காக கதையின் சூழல் விரியும். ரஜினி நாம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒரு நடிகர். என்னுடைய நடிப்பு கேரியரில் நான் சந்தித்த மிக முக்கிய நபரில் அவருக்கு தனி இடம் அளிப்பேன்’’ என்கிறார், அஞ்சலி பாட்டீல்.