ராம் சரண் படம் மூலம் தெலுங்கிலும் சிவராஜ்குமார் என்ட்ரி!

ராம் சரண் படம் மூலம் தெலுங்கிலும் சிவராஜ்குமார் என்ட்ரி!
Updated on
1 min read

சென்னை: கன்னட நடிகர் சிவராஜ்குமார் ராம்சரணுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் நடிகராக அறிமுகமாகிறார்.

ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படங்களின் மூலம் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அடுத்து அவர் தெலுங்கில் நடிகராக அறிமுகமாகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கிறார். ‘RC16’ என அழைக்கப்படும் இப்படத்தை புச்சி பாபு சனா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தில் சிவராஜ்குமார் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அடுத்து திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in