கடந்த கால தவறு: ஒப்புக்கொண்டார் சமந்தா

கடந்த கால தவறு: ஒப்புக்கொண்டார் சமந்தா
Updated on
1 min read

நடிகை சமந்தா, ஃபிட்னஸ் பயிற்சியாளர் அல்கேஷ் ஷரோத்ரியுடன் இணைந்து, 'டேக் 20' என்ற பெயரில் ‘பாட் காஸ்ட்’டில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைப் பேசிவருகிறார். சமீபத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதின் முக்கியத்துவம் குறித்தும் சிலவகை உணவுகள், பானங்களை தவிர்ப்பது குறித்தும் விளக்கினார்.

அப்போது ஒருவர், ஆரோக்கியமற்ற பிராண்ட் ஒன்றில் சமந்தாவும் விளம்பர தூதராக இருந்தது பற்றி கேட்டிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட சமந்தா கூறும்போது “கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான். வேண்டும் என்றே செய்யவில்லை. தெரியாமல் செய்த தவறு அது. உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பரப் படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்பாக இருக்கிறேன்’’ என்றார். சமந்தா இப்படி ஒப்புக்கொண்டதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in