

‘கே.ஜி.எஃப்’ படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் படம், ‘தி டாக்ஸிக்’. கீது மோகன் தாஸ் இயக்கும் இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சகோதரி கேரக்டரில் கரீனா கபூர் நடிப்பதாகக் கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியதால் நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 200 நாட்கள் நடக்க இருக்கிறது. இந்தியாவில் 50 நாட்களும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் 150 நாட்களும் நடக்க இருக்கிறது. இந்தப்படம், பிரபல ஆங்கில த்ரில்லர் தொடரான ‘பீக்கி பிளைண்டர்’ போல உருவாவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஹுமா குரேஷி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.